திட்டக்குடியில் கடலை பக்கோடா, சொத்தைப்பல் பக்கோடாவாக மாறியது

திட்டக்குடியில் கடலை பக்கோடா, சொத்தைப்பல் பக்கோடாவாக மாறியது
X

கடலை பக்கோடாவில் சொத்தைப் பல் சேர்ந்து வந்த அதிசியம்.

பேக்கரி கடையில் பக்கோடா வாங்கிவருக்கு பக்கோடா உடன் சொத்தை பல் சேர்ந்து வந்தால் அதிர்ச்சியடைந்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் கொளஞ்சி என்பவர் சாப்பிட கடலை பக்கோடா கேட்டுள்ளார். அந்த கடை ஊழியர்கள் பேப்பரில் பக்கோடா கொடுத்துள்ளனர் . கொளஞ்சி அதை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்த போது பக்கோடா உடன் ஏதோ வித்தியாசமாக ஒரு பொருள் இருப்பதை பார்த்துள்ளார்.

அது என்ன? என்று பார்த்த போது சொத்தை பல் ஒன்று இருந்திருக்கிறது இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கொளஞ்சி கடை விற்பனையாளரிடம் அது குறித்து கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது . உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!