திட்டக்குடி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து

திட்டக்குடி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து
X

பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்த பாடப்புத்தகங்கள்

திட்டக்குடி அடுத்த செங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாடப்புத்தகங்கள், ஆவணங்கள் சேதம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று காலை வழக்கம் போல் தலைமை ஆசிரியர் மற்றும் 5 ஆசிரியர்களுடன் பள்ளி பணி நடைபெற்றது.

மதியம் அனைவரும் வீடு திரும்பிய நிலையில் மர்மமான முறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்களின் பாடப் புத்தகங்கள், சீருடை, மாணவர்கள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. பள்ளி வளாகத்தில் இருந்த ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான சுத்திகரிக்கப்படும் குடிநீர் இயந்திரம்,3 மடிக்கணினிகள் முழுவதும் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து திட்டக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தும் தீயணைப்புத்துறையினர் வராததால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் பள்ளிக் கட்டிடம் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆவினங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!