மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது
X

கைது செய்யப்பட்ட சக்திவேல்.

திட்டக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் கூலித்தொழிலாளி அவரது மனைவி அலமேலு மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சக்திவேல் மற்றும் மனைவி மகளுடன் சிறுமங்கலம் கிராமத்தில் வசித்துவருகிறார்.

சிறுமி வேப்பூர் அருகே தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சக்திவேல் மனைவியுடன் மற்றும் மகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது சொந்த மகளிடம் சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி பள்ளியில் சோகமாக இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது ஆசிரியர் ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார் அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆசிரியர் கடலூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமியிடம் விசாரணை செய்ததில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து ஆவினங்குடி காவல் நிலையத்தில் குழந்தைகள் உதவி மைய அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அவரது தந்தை சக்திவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தந்தையே மகளை பாலியல் துன்புறுத்திய செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்