குடிக்க தண்ணீர் கேட்டு வந்த சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த முதியவர் கைது

குடிக்க தண்ணீர் கேட்டு வந்த சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த முதியவர் கைது
X
ராமநத்தம் அருகே குடிக்க தண்ணீர் கேட்டு வந்த சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கிராமத்தை ஒட்டிய பகுதியில் ஆடு மாடுகள் மேய்த்து கொண்டு இருந்துள்ளார்

அப்பொழுது சிறுமிக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால், ஆக்கனூர் ஏரிக்கரை ஓரமாக உள்ள செல்வராசு வயது (52) என்பவர் வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார் ‌.

அப்போது செல்வராசு சிறுமியை தண்ணீர் தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து வலுக்கட்டாயமாக சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கூச்சல் போடவே செல்வராசு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

தகவல் அறிந்து சிறுமியின் பெற்றோர் ராமநந்தம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் செல்வராசு பாலியில் பலத்காரம் செய்தது உண்மை என தெரியவந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!