திட்டக்குடி அருகே உணவு சமைத்து தர்ணா போராட்டம்

திட்டக்குடி அருகே உணவு சமைத்து தர்ணா போராட்டம்
X

திட்டக்குடி அருகே இலவச வீட்டுமனைக் கேட்டு நடந்த போராட்டம்.

திட்டக்குடி அருகே இலவச மனை பட்டா வழங்க கோரி அருந்ததி இன மக்கள் கொட்டகை அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி அடுத்துள்ள தர்ம குடிக்காடு மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் அருந்ததிய மக்கள் அருகில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் போராட்டம் நடத்தினர்.

எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணையில் குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து மின் இணைப்பு பெற்றுள்ளார். இத்தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் திடீரென நேற்று இரவு ஒன்று திரண்டனர்.

அங்கு சமையல் செய்து சாப்பிட்டு அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் மற்றும் காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு அமைக்கப்பட்ட கொட்டகை மின் இணைப்பை துண்டித்தனர்.

மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அருந்ததியின மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!