கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: சிவி சண்முகம் திறப்பு

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: சிவி சண்முகம் திறப்பு
X

அதிமுக சார்பில் திறக்கப்பட்டுள்ள நீர்மோர்ப் பந்தல்.

கடலூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

கடலூர் மாவட்டம், நல்லூர் மேற்கு ஒன்றியம், இறையூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் பொன்னேரி முத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

அதுபோல், திட்டக்குடியில் நகரக் கழகச் செயலாளர் அரங்க. நீதிமன்னன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ராமநத்தம் மற்றும் கல்லூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் வாகை. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

இதில், பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!