திட்டக்குடியில் கொரோனா நிவாரண தொகை ரூ.2000/- எம்எல்ஏ வழங்கினார்

திட்டக்குடியில் கொரோனா நிவாரண தொகை ரூ.2000/- எம்எல்ஏ வழங்கினார்
X
திட்டக்குடி எம்.எல்.ஏ. கணேசன் கொரோனா நிவாரன தொகை 2000 ரூபாயை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும் பெரும் தொற்று நேரத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை அகதிகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 நிவாரணத்தொகை முதல் தவணையாக வழங்கிட தமிழக முதல்வரரால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள 1420 நியாயவிலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 737043 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், மற்றும் 428 இலங்கை அகதிகள் குடும்ப அட்டைகள், கூடுதல் 737471 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 நிவாரணத்தொகை முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்திற்கு ரூபாய் 147.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் திட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலைக் கடையில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

#கடலூர் #கொரோனா #ரூபாய்2000 #நிவாரணத்தொகை #இன்ஸ்டாநியூஸ் # Cuddalore # Corona # Rupees 2000 # Relief # Insta News #tamilnadu #திட்டக்குடி #relief #relieffund #2000rs #mla #ganesan #minister #quarentain #lockdown #CoronaFund #coronavirus #CoronaSpread #Corona2ndWave #covid-19

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!