வீச்சரிவாளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வைரலான வீடியோ - போலீசார் விசாரணை

X
திட்டக்குடி அருகே பொது இடத்தில் வீச்சரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜா. இவர் சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பொது இடத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது இவரது நண்பர்கள் இவருக்கு வீச்சரிவாள் வழங்குகின்றனர் நண்பர்களுடன் சேர்ந்து முத்துராஜா கையில் வீச்சரிவாள் உடன் கெத்தாக எடுத்துக்கொண்ட வீடியோ மூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனைப் பார்த்த திட்டக்குடி போலீசார் கையில் வீச்சரிவாளுடன் போஸ் கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய முத்துராஜாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!