வேப்பூர் அருகே வங்கியில் போலி ரசீது தயாரித்து மோசடி செய்த தந்தை -மகன்
வேப்பூரில் போலி வங்கி ரசீது தயாரித்து மோசடி செய்த தந்தை- மகன்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள மங்களூர் பகுதியில் கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் நமச்சிவாயம் என்பவர் நகை மதிப்பீட்டாளராக கடந்த 30 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார், இவருடைய மகன் சங்கரன் என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக அதே வங்கிகள் நகைமதிப்பீட்டாளராக உள்ளார்.
இங்கு நகை அடகு வைத்தவர்களுக்கு வங்கி பெயர் அச்சிட்ட வெள்ளை நிற தாள் வழங்குவது வழக்கம்,கடந்த சில மாதங்களாக நமச்சிவாயம் மற்றும் அவருடைய மகன் சங்கரன் இருவரும் மஞ்சள் நிற பேப்பரில் கனரா வங்கி பெயரில் போலி ரசீது தயாரித்து பொது மக்களிடம் வழங்கியுள்ளனர்.
அடகு வைத்த நகைக்கு வட்டி செலுத்த வரும் பொது மக்களிடம் வெள்ளை நிற பேப்பர் மற்றும் ரசீது பேப்பரையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு வட்டி கட்டியதற்கான ரசீீீதினை மறுநாள் வாங்கிக்கொள்ளுமாறு கூறி பணத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து பொது மக்களை அலைக்கழித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பொது மக்கள் ரசீது மற்றும் பணத்தை கேட்டு நெருக்கடி செய்யவும் திங்கட்கிழமை தருவதாக பொது மக்களிடையே நைசாக பேசி அனுப்பி உள்ளனர்.
தந்தையும் மகனும் சுமார் ஒரு கோடிக்கு மேல் கையாடல் செய்து கொண்டு தலைமறைவாகி விட்ட நிலையில் இன்று மதியம் தகவல் அறிந்து பொது மக்கள் வங்கியின் முன் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu