திட்டக்குடியில் ஒரு லட்சம் மதிப்பு போதைப் பொருட்கள் பறிமுதல்

திட்டக்குடியில் ஒரு லட்சம் மதிப்பு போதைப் பொருட்கள் பறிமுதல்

திட்டக்குடி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

திட்டக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்றதாக ஒரு கடைக்கு உணவு பாதுகாப்புதுறையினர் சீல் வைத்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்வதை தடுக்க அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வியாபாரிகளில் சிலர் தொடர்ந்து கள்ள சந்தையில் புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதியில் கடலூர் மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியன் ஆகியோர் திட்டக்குடி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திட்டக்குடியில் இருந்து விருதாச்சலம் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் இயங்கிவரும் மளிகைக்கடையில் ஆய்வு செய்தபோது ரூ.1 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட 75 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மளிகை கடைக்கும் போலீசார் முன்னிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story