கடலூா் மாவட்டத்தில் இன்று காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள்

கடலூா் மாவட்டத்தில் இன்று காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள்
X

 டெங்கு காய்ச்சல் - பைல் படம்

கடலூா் மாவட்டத்தில் இன்று 126 இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது

ஞாயிற்றுக்கிழமை (அக். 1) அன்று கடலூா் மாவட்டத்தில் 126 இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் தெரிவித்தார்

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பருவநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருத்துவ முகாம்களை நடத்த தமிழ்நாடு முதல்வா் உத்தரவிட்டார். அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகா்புறங்களில் 126 இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமில் காய்ச்சல் உள்ளவா்கள் மற்றும் சிறு உபாதைகள் உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தேவைப்படுவோருக்கு தீவிர சிகிச்சைக்கு பரிந்துரை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக களப்பணியாளா்கள் வீடுகள்தோறும் சென்று ஆய்வு செய்து, காய்ச்சல் பாதிப்புள்ளவா்களை சிகிச்சை முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பொதுமக்கள் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும். மேலும், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவின் உற்பத்தியை கட்டுப்படுத்த தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் சுய சிகிச்சை பெறுவதையும், மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி உள்கொள்வதையும் தவிர்த்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!