நெல்லிக்குப்பத்தில் காட்டுப்பன்றிகளை விரட்டுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம்

நெல்லிக்குப்பத்தில் காட்டுப்பன்றிகளை விரட்டுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
X

நெல்லிக்குப்பம் அருகே பன்றிகளை விரட்டியடிப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் அதிக அளவில் காட்டுப்பன்றிகள் உள்ளதால் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை

நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட விவசாய பகுதிகளில் மிகுந்த அளவில் காட்டுப்பன்றிகள் உள்ளதாகவும். இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் கரும்பு, நெல், வாழை, தானியபயிர்கள் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் சேதமடைவது குறித்து விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையளித்தது. இதனைத்தொடர்ந்து விவசாயிகள் பலமுறை புகார் அளித்துவந்தனர்.

பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அண்ணாகிராம விவசாய துணை இயக்குனர் சுரேஷ், வட்டார உதவி வேளாண்மை அலுவலர் ரஞ்சனி,உதவி மேலாண்மை இயக்குனர் பிரகாஷ் மற்றும் வீராசாமி உள்ளிட்ட அதிகாரிகள் குழு நெல்லிக்குப்பம் காட்டுப்பன்றியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் அங்கு கூடியிருந்த விவசாயிகளுக்கு பன்றிகளை விரட்டியடிப்பது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் விவசாயிகள் ஜெ.ராமலிங்கம், ஶ்ரீதர்,ராமானுஜம் உள்ளிட்ட விவசாய பிரதிகள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

காட்டுப்பன்றிகளை விரட்டுவது குறித்து வேளாண்மை துணை இயக்குநர் சுரேஷ் கூறும்போது, தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். தற்போது விவசாயிகளின் பிரச்சினைக்கு பன்றி விரட்டி எனப்படும் இதுஒருவகையான பூச்சி விரட்டியை அறிமுகம் செய்துள்ளோம். இதன் விலை ஒரு லிட்டர் 590 ரூபாய் ஒரு ஏக்கருக்கு 500மில்லி போதுமானது.10மீட்டர் இடைவெளிவிட்டு 5மில்லி அளவுடன் ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் நான்கு துளையிட்டு கட்டி தொங்கவிட்டால் காட்டுப்பன்றிகள் இதன் வாசனை முகர்ந்ததும் ஓடிவிடும் என தெரிவித்தார்.

மேலும் கூறுகையில் இந்த மருந்து தற்போது வேளூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண்மை ஆராச்சி நிலையத்தில் கிடைக்கும் எனவும் தேவைப்படும் விவசாயிகள் ஆத்மா உதவி திட்டத்தின் கீழ் பெறலாம் என தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!