நெல்லிக்குப்பத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்.

நெல்லிக்குப்பத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்.
X

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம். இஐடி பாரி அனைத்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகள் சங்கம்.இஐடி பாரி அனைத்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம். இஐடி பாரி அனைத்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு தலைமை தாங்கினார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதியின்படி ஒரு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்குதல், 2020-21 பருவ கரும்புக்கு ஒரு டன்னுக்கு 300 ரூபாய் விவசாயிகளுக்கு மாநில அரசே நேரடியாக வழங்குதல், நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி சர்க்கரை ஆலையில் கரும்பில் கழிவு என்கிற பெயரில் மூன்று ஆண்டுகளாக பிடித்தம் செய்த கரும்புக்கான பணத்தை விவசாயிகளுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

இதில் கரும்பு விவசாயிகள் சங்க நெல்லிக்குப்பம் நகர நிர்வாகிகள் மணி,சம்பத்குமார் ராமானுஜம் ,டி.எம்.ரவிகுமார், மற்றும் விசிக நகர செயலாளர் திருமாறன், மற்றும் இஐடி பாரி அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil