பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள்  கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்
X

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் சுவாமி வீதி உலா வந்தார்.

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவ விழா நடைபெற்றது.

பண்ருட்டி திருவதிகை‌ சரநாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத‌ ஏகதின பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நடந்தது.இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத சேவை, 6 மணிக்கு தோமாலை சேவை, 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து காலை 8.15 மணிக்கு அம்ச வாகனத்திலும், 9 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 10 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 11 மணிக்கு சேஷ வாகனத்திலும், 12 மணிக்கு கருட வாகனத்தில் என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மூலவர் சரநாராயண பெருமாள் திருமலை திருப்பதி மலையப்ப சாமி அலங்காரத்தில் நெய்தீப ஒளி அலங்காரத்திலும், மூலவர் ஹேமாம் புஜவல்லி தாயார் வெள்ளங்கி அலங்காரத்திலும் காட்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்