தொடர் மழையால் குளமாக மாறிய சாலைகள், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தொடர் மழையால் குளமாக மாறிய சாலைகள், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
X
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அரசு மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது., நேற்று சுமார் அரை மணி நேரம் பெய்த காற்றுடன் கூடிய கனமழையால் ஏராளமான குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அரசடிக்குப்பம் A. புதூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே குளம்போல் காட்சி அளிக்கும் தார்சாலை முழுவதும் தண்ணீர் இருந்ததால் வாகன ஓட்டிகள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த இடத்தில் பள்ளிகள்,குழந்தைகள் அங்கன்வாடி மையம் உள்ளது.சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர் செல்ல வடிகால் அமைக்க வேண்டும் என்று போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!