பண்ருட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

பண்ருட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

பண்ருட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

பண்ருட்டியில் ரூ10லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அதிரடி

பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் நந்தகுமார், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வீரப்பெருமாநல்லூரில் நேற்று மினி வேனில் கடத்தப்பட்ட, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வீரப்பெருமாநல்லூர் நேரு வீதியை சேர்ந்த ஜெயபால்(45) உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், வீரப்பெருமாநல்லூரில் உள்ள ஜெயபால் வீட்டில் மூட்டை மூட்டையாக புகையிலைப் பொருள்கள்,பான்மசாலா உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இன்று ரூபாய் 10லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்