/* */

ரேசன் கடையில் தரமற்ற அரிசி: பொதுமக்கள் புகார்

பண்ருட்டி அருகே ரே‌ஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ரேசன் கடையில் தரமற்ற அரிசி: பொதுமக்கள் புகார்
X

செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியை குப்பையில் கொட்டிய மக்கள் 

பண்ருட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கு செட்டிப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதி மக்கள் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையில் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசி சமைத்து உண்ண முடியாதவாறு அளவில் பெரியதாகவும், புழு, வண்டுகள் மற்றும் அரிசியில் தூசி, சிறு கற்கள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன.

இந்த அரிசியை பலமுறை கழுவி சமைத்தாலும் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ரே‌ஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ரே‌ஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Updated On: 29 March 2022 3:44 PM GMT

Related News