/* */

பண்ருட்டி திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பண்ருட்டி திரௌபதி அம்மன் கோவிலில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

பண்ருட்டி திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
X

பண்ருட்டி திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

பண்ருட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவிலி ஆண்டுதோறும் 18 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 31-ந் தேதிகொடியேற்றத்துடன் 18 நாள் உற்சவம் தொடங்கியது. இதன் முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா பண்ருட்டி களத்துமேட்டில் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள், திரௌபதிஅம்மன், அர்ஜுனன் ஆகியோர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதனை தொடர்ந்து பூங்கரகம் தீ குழியில் இறங்கிய உடன் பக்தர்கள் தீமிதித்தனர். இதில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வீதியுலா காட்சி நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா, விழாக்குழுவினர், பொதுமக்கள், உற்சவதாரர் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இதனையொட்டி கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.

Updated On: 23 April 2022 2:00 PM GMT

Related News