பக்தர்கள் இன்றி வசந்த உற்சவம்..!

பக்தர்கள் இன்றி வசந்த உற்சவம்..!
X

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத அமாவாசை அன்று வசந்த உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மிகவும் எளிமையாக உள்விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த கோவிலில் நேற்று வைகாசி மாத அமாவாசையையொட்டி வசந்த உற்சவம் நடைபெற்றது. இதில் சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!