வங்கி மேலாளர் வீட்டில் 10 சவரன் திருட்டு; பண்ருட்டி போலீசார் விசாரணை

வங்கி மேலாளர் வீட்டில் 10 சவரன் திருட்டு; பண்ருட்டி போலீசார் விசாரணை
X

உடைக்கப்பட்ட பீரோ.

பண்ருட்டியில் வங்கி மேலாளர் வீட்டில் 10 சவரன் நகைகளை மர்ம நபரகள் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி நேரு நகரை சேர்ந்தவர் செந்தில்ஆனந்த்,(40). இவர் தனியார் வங்கியில் கிளை மேலாளராக உள்ளார். இவரது மனைவி இளவரசி,(37) இவர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

நேற்று காலை 9 மணிக்கு இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலை 5:45 மணியளவில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த இளவரசி வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, விட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு அறையில் இருந்த பீரோவில் இருந்த வளையல்,மோதிரம், செயின் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது.

திருட்டுச் சம்பவம் தொடர்பாக இளவரசி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!