பண்ருட்டியில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்

பண்ருட்டியில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்
X

கடலூர் சித்த மருத்துவமனை சார்பில்  பொதுமக்களுக்கு சித்த மருந்துகள்,கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

பண்ருட்டி சித்த மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சித்த மருந்துகள்,கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழக அரசு உத்தரவின்படி கொரோனா விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் சித்த மருத்துவ அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்திய மருத்துவ துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் மிக்க சித்த மருந்துகள்,கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்கும் விழா பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் விஜயகுமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாக்கியநாதன், சுகாதார ஆய்வாளர் சிவப்பிரகாசம் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்,

Tags

Next Story
ai marketing future