பண்ருட்டி சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் பணம் திருடியவர் கைது
நூதன முறையில் பணம் திருடிய சரவணன்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சோமேஸ்வரன் கோவில் தெருவில் பானுகோபன் என்பவர் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு நேற்று வந்த ஒரு நபர் அந்த சூப்பர் மார்க்கெட்டில் கல்லா பெட்டி அருகே இருந்த வேலை செய்யும் பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து உள்ளார்.
அப்பொழுது அந்த பெண்ணிடம் முதலாளி இல்லையா என கேட்டு உள்ளார், பின்னர் முதலாளிக்கு போன் போட்டு தருமாறு கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணும் வந்திருந்த நபரின் பேச்சை நம்பி அவரது ஓனருக்கு போன் செய்தார்.போன் செய்தவுடன் ஓனரிடம் பேசிய அந்த நபர் தனக்கு இது, அது வேண்டும் என்று அங்கு இல்லாத பொருட்களை கேட்டு உள்ளார், பல பொருட்களை கேட்டதால் இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுக்கு தேவையான எல்லாம் தருகிறேன் என முதலாளி கூறி உள்ளார்.
இதற்கிடையில் கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் தான் பல பொருட்களை வாங்க போவதாக பல ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார் அந்த நபர்.
அந்தப் பெண் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு முன்பாகவே அந்த பெண்ணிடம் மீண்டும் ஓனருக்கு போன் போட சொல்லி உள்ளார். அந்தப் பெண்ணும் ஓனருக்கு போன் போட்டு தந்ததும் ஹலோ என்று பேசுவதற்குள் அந்த பொண்ணுக்கு தெரியாமல் போனை ஆப் செய்துவிட்டு போனில் பேசிக் கொண்டிருப்பதாக நடித்து உள்ளார்.
பின்னர் போனில் பேசிய முதலாளி பெண்ணிடம் ரூ. 2 ஆயிரம் வாங்கிக் கொள்ள சொன்னார் என்று சொல்ல அந்த பெண்ணும் அவனிடம் ரூ 2 ஆயிரத்தை எடுத்து கொடுத்துவிட்டு அந்த நபரின் பெயர் என்ன, நீங்க யாரு என்று கேட்டுள்ளார், என்னம்மா என்னையா தெரியல என்று எதிரில் உள்ள கடையை காட்டி அங்கதான் நான் அடிக்கடி வருவேன் என்று கூறி கம்பி நீட்டி உள்ளார். பின்னர் சூப்பர் மார்க்கெட்டிற்கு முதலாளி வந்த பிறகுதான் பெண் யாரிடமோ பணம் கொடுத்து ஏமாந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது.
பின்னர் இதுகுறித்து பானுகோபன் அளித்த புகாரின் பேரில் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இன்று விசாரணையின் அடிப்படையில் பண்ருட்டி காவல் துறையினர் பணத்தை திருடியது சிதம்பரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரவணன் என்பதை அறிந்து அவரை கைது செய்து பணத்தை கைபற்றி அந்த நபரை சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu