பண்ருட்டியில் காவல்துறைக்கு ரூ.3.50 லட்சம் செலவில் 50 பேரி கார்டுகள்

பண்ருட்டியில் காவல்துறைக்கு ரூ.3.50 லட்சம்  செலவில் 50 பேரி கார்டுகள்
X

பண்ருட்டி காவல் நிலையத்திற்கு  பேரிகார்டு வழங்கிய ஜேப்பியார் ஸ்டீல்ஸ்.

பண்ருட்டியில் காவல்துறைக்கு ரூ.3.50 லட்சம் செலவில் 50 பேரி கார்டுகளை ஜேப்பியார் ஸ்டீல்ஸ் வழங்கியது.

பண்ருட்டியில் பெருகிவரும் போக்குவரத்தை சீரமைத்து ஒழுங்குபடுத்த பேரிகார்டுகள் தயார் செய்து வழங்கி உதவுமாறு வணிக நிறுவன அதிபர்களுக்கு பண்ருட்டி போலீஸார் வேண்டுகோள் விடுத்தனர்.

பண்ருட்டி காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று பண்ருட்டி ஜேப்பியார் ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர்உசேன் 3.௫௦ லட்ச ரூபாய் செலவில் 50 பேரி கார்டுகளை வழங்குவதாக உறுதி அளித்தார்.

இதனையொட்டி பேரி கார்டு வழங்கும் விழா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் ஜாகிர் உசேன் சகோதரர் சுல்தான் கலந்து கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லாவிடம் 50 பேரிகார்டுகளை வழங்கினார்.

விழாவில் இன்ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், ஜேப்பியார் ஸ்டீல்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்