கடலூர் தி.மு.க. எம்.பி. மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றம்

கடலூர் தி.மு.க. எம்.பி. மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றம்
X

மர்மமாக இறந்த கோவிந்தராசு,  தி.மு.க எம்.பி ரமேஷ்

கடலூர் தி.மு.க. எம்.பி. மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி. ஆர். வி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், கோவிந்தராசுவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காடாம்புலியூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிந்தராசுவின் மரணத்திற்கு நீதி கேட்டு மனுவும் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து டி.ஆர்.வி ரமேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக காடாம்புலியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக மகன் செந்தில்வேல் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய காடாம்புலியூர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!