பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களுக்கு தர்ம அடி.

பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களுக்கு தர்ம அடி.
X

பண்ருட்டியில் பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற கலியமூர்த்தி 

பண்ருட்டியில் பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களுக்கு தர்ம அடி. ஒருவர் கைது. மற்றொருவர் தப்பியோட்டம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மூப்பனார் நகரை சேர்ந்த ஜோதிபாஸ் மனைவி அல்லி. இவர் பிள்ளைகளுடன் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது முகவரி கேட்பது போல் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர். அல்லியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள், அதில் ஒருவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து பண்ருட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பியோடி விட்டார்.

விசாரணையில் அவர்கள் இருவரும் குள்ளஞ்சாவடி தெற்கு வசந்தன்குப்பம் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மற்றும் ராமர் என தெரியவந்துள்ளது இவர்கள் தொடர்ந்து பல பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கலியமூர்த்தியை கைது செய்து. திருடிய தாலிச் செயினை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய ராமரை போலீசார் தேடி வருகின்றனர்

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்களே பிடித்து காவல் துறையிடமும் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது,

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!