பைக்கில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பு

பைக்கில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பு
X

கடலுார் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று நகரசெயலாளர் ஓட்டு கேட்டார்.


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் பண்ருட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சௌந்தர் 700க்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள் உடன் மோட்டார்பைக்கில் ஊர்வலமாக சென்று அதிமுகவிற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் நெல்லிக்குப்பம் நகர அதிமுக நிர்வாகிகள் சார்பு அணியினர் தொழில்நுட்ப அணியினர் மற்றும் அனைத்து நகர கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.கொளுத்தும் வெயிலிலும் நகரம் முழுவதும் சென்று ஓட்டு கேட்ட அவருக்கு வழிநெடுகிலும் கட்சிக்காரர்கள் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!