பண்ருட்டிபள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி

பண்ருட்டிபள்ளியில் குழந்தை தொழிலாளர்  முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி
X

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை நடத்தினர்

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை நடத்தினர்

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோ. பூவராகமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் .பெ. சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை வாசிக்க மாணவர்களும், பொதுமக்களும் உறுதிமொழியை ஏற்றனர்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தில் வேல்முருகன் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட நிகழ்ச்சி குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினார்.

நிகழ்வில் இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட துணை கன்வீர் வீரப்பன், தலைமை ஆசிரியர் சீனுவாசன், கிருஷ்ணன், பென்னி, பாலு, ஆனந்த், விஸ்வா, நூர் முகமது , அன்பு தமிழரசன் மற்றும் , பொதுமக்கள் பலர் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வின் நிறைவாக பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா அவர்கள் நன்றி உரையாற்றினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்