பணிநீக்கம்:அம்மா உணவக பணியாளர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பணிநீக்கம்:அம்மா உணவக பணியாளர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
X

கடலூரில் அம்மா உணவக பணியாளர்கள் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

கடலூரில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து பணி வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது.

பண்ருட்டி நகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகம் ஊழியர்கள் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு ஒன்றினை அளித்தனர்.

அதில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 250 ரூபாய் ஊதியம் பெற்று 12 நபர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாகவும்,கொரோனா காலத்திலும், மழை,புயல்,வெள்ளம் காலத்திலும் உயிரை பணயம் வைத்து உணவு தயாரித்து வந்த நிலையில், இங்கு பணிபுரியும் 12 பெண்களில் 6 பேரை பணிக்கு வர வேண்டாம் என பண்ருட்டி நகராட்சி அதிகாரிகள் திடீரென தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதால், அங்கு அவர்களுக்கு தொடர்ந்து பணி செய்யவும், ஊதிய உயர்வு அளிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு