பண்ருட்டி அருகே 9ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி

பண்ருட்டி அருகே 9ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி
X

மேல்பட்டாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி.

பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9,10 ஆகிய வகுப்புகளில் சுமார் 156 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் இருந்ததாகவும் அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு உள்ளார்.

அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில், அந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேஷ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாணவருடன் இருந்த 14 மாணவர்களுக்கும் 4 ஆசிரியர்களுக்கும் மருத்துவ குழுக்கள் விரைந்து சென்று கொரோனா பரிசோதனை செய்தனர்.

மேலும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் தூய்மை பணியினை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!