கடலூரில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

கடலூரில் 5 வயது சிறுமியை  பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
X

20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தனசேகர் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

கடலூரில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவர் ஒரு கூலித்தொழிலாளி. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து தனசேகரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் கூலித்தொழிலாளி தனசேகரரை இன்று ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையை முடித்த நீதிபதி எழிலரசி 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனசேகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நலவாழ்வு நிதி மூலமாக கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரூ. 5 லட்சம் இழப்பீடு ஒரு மாதத்திற்குள் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ஏழிலரசி உத்தரவிட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!