பண்ருட்டி: வீட்டு முன் தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

பண்ருட்டி: வீட்டு முன் தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
X

பண்ருட்டியில் மழைநீரில் மூழ்கி இறந்த குழந்தை சுதேசமித்திரன்.

பண்ருட்டியில் வீட்டு முன் தேங்கியிருந்த மழை நீரில் விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினாலும், ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பல இடங்களில் மழைத் தண்ணீர் சூழ்ந்து தேங்கியுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆர்.எஸ். மணி நகரில் வசிக்கும் சந்திரன் என்பவருடைய இரண்டு வயது குழந்தை சுதேசமித்திரன் வீட்டு வாசலில் தேங்கியிருந்த மழைத் தண்ணீரில் எதிர்பாராமல் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்த சந்திரன் மற்றும் குழந்தையின் தாய், உறவினர்கள் உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.பரிசோதித்த மருத்துவர் குழந்தை சுதேசமித்திரன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

மழைநீர் வெளியேற்ற எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே தற்போது குழந்தை உயிரிழக்க காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

வீட்டு வாசலில் தேங்கியிருந்த மழை நீரில் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உளளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!