பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நகை திருடிய 2 பெண்கள் கைது

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நகை திருடிய 2 பெண்கள் கைது
X

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பெண்களிடம் நகைகளை திருடிய 2 கில்லாடி பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பெண்களிடம் நகைகளை திருடிய 2 கில்லாடி பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் ஒன்றில் புதுப்பேட்டை வழியாக அரசூர் செல்லும் இந்த தனியார் பஸ்ஸில் ஏராளமான பெண்கள் முண்டியடித்து ஏறினர்.

புதுப்பேட்டை அடுத்த மேல்அருங்குணம் மாரியம்மன் கோவில் தெரு தாகப்பிள்ளை என்பவரது மனைவி ராமாயி(32) என்பவரும் இந்த பஸ்ஸில் ஏறினார். இவரிடமிருந்து‌ பணம், நகை ஆகியவற்றை முண்டியடித்து ஏறிய பெண்கள் பறித்துள்ளனர். பணம் நகையை பறிகொடுத்த ராமாயி கூச்சலிட்டார்.

உஷாரானபஸ் ஊழியர்கள் பஸ்ஸிலிருந்து யாரும் இறங்க விடாமல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து பஸ்சில் சோதனை செய்தனர். சோதனையில் அப்போது இந்த பஸ்சில் கூட்டத்தோடு கூட்டமாக ஏறிய 2 பெண்களை பிடித்த போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணைநடத்தினர்

விசாரணையில் இவர்கள் இரண்டு பேரும் வேலூரை சேர்ந்த நந்தினி(30), மரகதம் (28) என தெரியவந்தது. இதனைதொடர்ந்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்தீபன் ஆகியோர் இந்த 2 பெண்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 பவுன் நகை, பணம் ரூ5ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்தனர். பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!