பண்ருட்டி அருகே சாராயம் கடத்திய முதியவர் கைது

பண்ருட்டி அருகே சாராயம் கடத்திய முதியவர் கைது
X

கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் (55 ) உடன் காவலர்கள்.

இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, சாராயம் கடத்திய நபரை சிறையில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் சட்டவிரோதமாக 10 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

பண்ருட்டி போலீசார் சாராயம் கடத்தி வந்து நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சாராயம் கடத்தி வந்த நபர் விழுப்புரம் மாவட்டம் பில்லூர் செட்டியார் தெருவை சேர்ந்த வைத்தியநாதன் (55 ) என்பதும், இவர் பலமுறை சாராயம் கடத்திய வந்து பண்ருட்டி பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. வைத்தியநாதனை கைது செய்து பண்ருட்டி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story
ai solutions for small business