கேப்டனை முதல்வராக்கியே தீருவேன்: விஜயபிரபாகரன் பேச்சு

கேப்டன் அவர்களை முதல்வராக்கியே தீருவேன் என பண்ருட்டியில் நடந்த கட்சி கூட்டத்தில் விஜயபிரபாகரன் பேச்சு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கட்சியின் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், இந்த மாவட்டம் கேப்டன் அவர்களின் கோட்டை. இந்த மாவட்டத்தில் இருந்துதான் முதல் எம்எல்ஏ என்ற பெருமையும் எங்களுக்கு உண்டு. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இனிமேல்தான் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது. நமது தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கேப்டன் அவர்களை முதல்வர் ஆக்குவதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.நமது கடமை. நான் உங்களில் ஒருவன் உங்களோடு தான் இருப்பேன் என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட அவை தலைவர் ராஜாராம், பண்ருட்டி தொகுதி செயலாளர் ஜான்சிராணி தென்னரசு, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கஜேந்திரன், கடலூர் கேப்டன் மன்ற செயலாளர் வசந்த், கடலூர் தொகுதி செயலாளர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!