கெமிக்கல் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் நெய்வேலி செல்லும் மெயின் ரோட்டில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சலையில் முந்திரி எண்ணையில் கெமிக்கல் பயன்படுத்தி பதப்படுத்தி வாகனங்களுக்கு பயன்படும் பிரேக்சு தயாரிக்க பயன்படுத்தும் கெமிக்கல் பவுடர் தயார் செய்து வருகின்றனர்.
சென்னை , கோவை , மதுரை மட்டும் இன்றி சைனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது இந்த தொழிற்சாலை. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்களும் ஏராளமானோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன எந்திரங்கள் மற்றும் கெமிக்கல் பவுடர்கள் தீயில் எரிந்தன. தகவலறிந்த பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் நெய்வேலி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கெமிக்கல் தொழிற்சாலை என்பதால் தீ கட்டுக்குள் வராத நிலையில் கடலூரில் இருந்து தீயை அணைக்கும் அதிநவீன கெமிக்கல் நிரப்பப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வர வைக்கப்பட்டு நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேறியதால் அதிஷ்டவசமாக எந்த ஒரு உயிர்சேதமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu