நெய்வேலியில் வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாக மிரட்டிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

நெய்வேலியில் வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாக மிரட்டிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் சட்டத்தில் கைதானவர்கள்

நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாக மிரட்டிய ரவுடிகள் இருவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்

நெய்வேலி சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் ஜெயபால் என்பவர் தன்னை சிலர் அசிங்கமாக திட்டி, வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல் விடுவதாக கூறி கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர் லதா விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வீரமணி, சுதாகர், சத்தியமூர்த்தி, கார்த்தி, பிளேடு (எ) ரமேஷ், தமிழரசன், எழிலரசன், பிரசாந்த், யோகேஸ்வரன் ஆகியோரை 9 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான வீரமணி என்பவரின் மீது நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. வீரமணி மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 25 வழக்குகள் உள்ளன. சுதாகர் என்பவர் மீது ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர்மீது கொலை உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளன.

இவர்களின் குற்றசெய்கையை கட்டுபடுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஒராண்டு காலம் குண்டர் தடுப்புக்காவலில் ஆனையிட்டதின் பேரில் எதிரிகள் ஒராண்டு குண்டர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!