நெய்வேலியில் டாஸ்மார்க் கடை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை

நெய்வேலியில் டாஸ்மார்க் கடை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை
X
கிராம மக்களை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளதாக பாமகவினர் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள சிலம்பினாதன்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பத்திரக்கோட்டை கிராமத்தில் டாஸ்மார்க் கடை திறப்பதாக கிடைத்த தகவலையடுத்து மதுபான கடையின் முன்பு கிராம மக்கள் திரண்டு மதுபான கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனர்.

பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்ட சூழ்நிலையில் கிராம மக்களுக்கு ஆதரவாக பாமகவினர் டாஸ்மாக் கடையை மூட வேண்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாமக மாவட்ட செயலாளர் சன். முத்துகிருஷ்ணன் கூறுகையில் இப்பகுதியில் மதுபான கடை வரக்கூடாது என கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததாகவும், தற்போது கிராம மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக மதுபான கடை மூடப்பட்டு இருப்பதாகவும், நிரந்தர தீர்வு வேண்டி கிராம மக்களை ஒன்று திரட்டி நாளை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!