என்.எல்.சி. நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. எனப்படும் பழுப்பு நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். CORP/HR/402/19-2021 ஆகும்.துறைவாரியான காலியிடங்கள் விவரம்-
பணி: Junior Engineer Trainee(Mechanical)காலியிடங்கள்: 95
பணி: Junior Engineer Trainee(Electrical)
காலியிடங்கள்: 101
பணி: Junior Engineer Trainee(Civil)
காலியிடங்கள்: 21
பணி: Junior Engineer Trainee(Chemical)காலியிடங்கள்: 03
பணி: Junior Engineer Trainee(Mining)காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.31,000 - 1,00,000
கல்வி தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2021 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பபிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2022
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu