நெய்வேலி சுரங்கத்தில் மண் கொட்டும் இயந்திரம் சரிந்து விபத்து

நெய்வேலி சுரங்கத்தில் மண் கொட்டும் இயந்திரம் சரிந்து விபத்து
X

நெய்வேலி சுரங்கத்தில் சரிந்து விழுந்த 140 கோடி மதிப்புள்ள மண்வெட்டும் இயந்திரம் 

நெய்வேலி சுரங்கத்தில்மண் வெட்டும் இயந்திரம் கீழே விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயம்; நல்வாய்ப்பாக உயிர் இழப்புகள் இல்லை

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என திறந்தவெளி சுரங்கங்கள் உள்ளது இதன் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு அனல் மின் நிலையம் 1 விரிவாக்கம், அனல் மின் நிலையம் 2, அனல் மின் நிலையம் 2 விரிவாக்கம் என இதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக மேல் மண் எடுக்கப்பட்டு அதனை அருகில் உள்ள பகுதியில் பள்ளமான பகுதியில் மண் கொட்டும் எந்திரத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் மண் கொட்டும் இயந்திரம் திடீரென்று சரிந்தது இதில் பணிபுரிந்த ஆறு பேரில் ஐந்து பேர் தப்பினர் அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு என்.எல்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த இயந்திரத்தின் மதிப்பு 140 கோடி ஆகும் .

Tags

Next Story
ai in future agriculture