திருமண ஆசைக்காட்டி இளம் பெண் ஏமாற்றம், மாணவருக்கு 10 ஆண்டு ஜெயில்

திருமண ஆசைக்காட்டி இளம் பெண் ஏமாற்றம், மாணவருக்கு 10 ஆண்டு ஜெயில்
X

பைல் படம்

சிதம்பரம் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய மாணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதி மன்றம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (24), சிதம்பரம் அண்ணா மலை பல்கலைகழக மாணவர். இவ ருக்கும், சிதம்பரத்தில் வேலை பார்த்து வந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும், ஒன்றாக பஸ்சில் பயணம் செய்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறி யுள்ளது. இதன் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி இருவரும் உல் வாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே பெண்ணின் தரப்பினர். அருண்குமாரிடம் திருமணம் செய்துகொள்ள கேட்டுள்ளனர். ஆனால் அருண்குமார், தனது வீட்டில் சகோதரிக்கு திருமணம் ஆக வேண்டும் என்பதால் பொறுத்திருங்கள் என கூறிய தாக கூறப்படுகிறது.

ஆனால் சகோதரிக்கு திருமணம் ஆன நிலையில் அருண்குமார் தொடர்ந்து இளம்பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண்ணின் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில்நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில், இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய மாணவர் அருண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்ட னையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராத தொகை கட்ட தவறினால் மேலும் இரண்டு வருட சிறை தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அருண்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்,

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!