கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி
X

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி

குறிஞ்சிப்பாடி அருகே தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற மனைவி.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சி பேட்டை ஜே. ஜே நகர் பகுதியைச் சேர்ந்த மணிவேல் மகன் முருகன் வயது 37 கூலி தொழிலாளி இவருக்கும் சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவரது சொந்த அக்கா மகள் வனஜாவுக்கும் கடந்த 9 வருடம் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.இதில் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளது

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கிருஷ்ணகுமாருக்கும் வனஜாவுக்கும் கடந்த ஐந்து வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததது. கணவன் பலமுறை கண்டித்தும் கேட்காத வனஜா கடந்த 6-ம் தேதி வனஜா கிருஷ்ணகுமாரும் வீட்டின் அருகிலுள்ள மரவள்ளி தோட்டத்தில் தனிமையில் இருந்துள்ளனர்.இதனை அறிந்த முருகன் தனிமையில் இருந்ததை கையும் களவுமாக பிடித்துள்ளார்.

பின்னர் மனைவியை திட்டி அடிக்கும்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் தனது கைலியால் முருகன் கழுத்தை வனஜாவும் சேர்ந்து நெரித்து கொலை செய்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு வந்தனர். பின்னர் இரவு தெருவில் அனைவரும் தூங்கியபின் முருகன் உடலை எடுத்து வந்து வீட்டின் சந்தில் போட்டு, காலையில் அக்கம்பக்கத்தினர் கணவர் தடுக்கி விழுந்து இறந்து விட்டார் என்று நாடகமாடி உள்ளார் அதன்பேரில் முருகன் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்

ஆனால், அப்பகுதி மக்கள் முருகன் சாவில் சந்தேகம் உள்ளது என்று முருகன் உடம்பில் காயம் உள்ளதாகவும் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை முடித்து உடலை மீண்டும் கொடுத்தனர்.

பின்னர் போலீசார் வனஜாவிடம் விசாரணை செய்ததில் கள்ள தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டனர்.அதன் பேரில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வனஜாவையும் கிருஷ்ணகுமாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story