கடலூர்: சுவர் இடிந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி

கடலூர்: சுவர் இடிந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி
X

கடலூரில் வீடு இடிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மழையால் வீடு இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குமேலூர் கிராமத்தில் கனமழை காரணமாக குடிசை வீடு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலே சந்தோஷ்குமார் என்பவர் மரணமடைந்தார்.அவரது இறுதி சடங்கில் கலந்த கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உயிரிழந்த சந்தோஷ் குமாரின் குடும்பத்தாருக்கு தன் சொந்த பணம் ரூபாய் 25,000 நிவாரண உதவியாக வழங்கினார்.

கனமழை காரணமாக உயிரிழந்ததால் இந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.உடனடியாக பரிசீலனையில் எடுத்துக் கொண்ட முதல்வர் பேரிடர் நிதி 4,00,000 ரூபாய் ஒதுக்கி தந்தார்.

அந்த உதவி தொகையை தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ,சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன்,தமிழக அரசின் சார்பில் வடக்குமேலூர் கிராமத்திற்கு நேரில் சென்று இறந்து போன சந்தோஷ்குமாரின் மனைவி மற்றும் வாரிசுகளிடத்தில் இன்று வழங்கினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!