வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் கொடியேற்றம்
தைப்பூசத்தையொட்டி வடலூர் சத்தியஞான சபையில் கொடியேற்றம் நடந்தது.
Vadalur Thaipusam-வாடிய பயிரை கண்ட போதெல்லாம் நானும் வாடினேன் என்று பாடிய வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடை பெற்றாலும், இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு 151ம் ஆண்டு ஜோதி தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சத்திய ஞான சபை அமைந்துள்ள பார்வதிபுரம் கிராம மக்களின் சார்பில் சீர் வரிசைகள் கொண்டுவரப்பட்டது. கொடிமரத்தில் சன்மார்க்க அன்பர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என முழக்கமிட்டு கொடியேற்றப்பட்டது.
கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பக்தர்களுக்கு ஜோதி தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இணையவழி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக ஜோதி தரிசனம் காண மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வள்ளலார் திருக்கரங்களால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா விளக்கு இன்றும் பலருக்கும் பசிப்பிணி போக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu