குறிஞ்சிப்பாடியில் ஆதார் மையம் திறப்பார்களா என மக்கள் எதிர்பார்ப்பு

குறிஞ்சிப்பாடியில் ஆதார் மையம் திறப்பார்களா என மக்கள் எதிர்பார்ப்பு
X
குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் உள்ள 51 பஞ்சாயத்து கிராமங்களுக்கு ஒரு ஆதார் மையம் கூட செயல்படாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதி

குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் 51 பஞ்சாயத்து கிராமங்கள் அடங்கியுள்ள நிலையில் ஒரு ஆதார் மையம் கூட செயல்படாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று உள்ள காலகட்டத்தில் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. இதில் புதிதாக நபர்களுக்கு ஆதார் எடுப்பதற்காகவும், பெயர் திருத்தங்கள், பிறப்பு திருத்தங்கள் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய குறிஞ்சிப்பாடி தாலுக்கா அலுவலகத்தில் ஆதார் மையம் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குறிஞ்சிப்பாடி சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து வரும் நபர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து ஆதார் சேவை பெற தாலுகா அலுவலகத்திற்கு நாடும்போது அங்கு சேவை இல்லாமல் ஏமாற்றம் அளிப்பதால் மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

மேலும் குறிஞ்சிப்பாடி இந்தியன் வங்கியில் கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக டோக்கன் அடிப்படையில் ஒரு நாளைக்கு 15 நபர்களுக்கு மட்டும் சேவைகளை செய்துவருகின்றனர். குறிஞ்சிப்பாடி தாலுக்கா அலுவலகத்தில் இயங்கி வந்த ஆதார் மையம் கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து இன்னும் இயக்கப்படாமல் இருப்பதால், வட்டாட்சியர் அவர்கள் ஆதார் மையங்கள் உடனடியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிஞ்சிப்பாடி தாலுக்கா உட்பட்ட கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

உடனடியாக இயங்க நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்