காதலித்து ஏமாற்றியவரை போராடி கைப்பிடித்த கலைச்செல்வி-கடலூர் சுவாரஸ்யம்
திருமணம் மாதிரி படம்.
காதலித்து கர்ப்பம் ஆக்கிய காதலன் கை பிடிக்க மறுப்பு; காவல் நிலையத்தின் அருகிலேயே திருமணம் செய்து வைத்த போலீசார் கடலூரில் சுவாரஸ்ய சம்பவம்.
கடலூர் புதுவண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (21) கல்லூரி படிப்பை முடித்த இவர் வீட்டில் இருந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(24) இவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கலைச்செல்வி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி தமிழ்ச்செல்வனை கலைச்செல்வி வலியுறுத்தி வந்த நிலையில் அவர் அதற்கு முடியாது என்று கூறி வந்துள்ளார். இந்த நிலையில் கலைச்செல்வி ஆறு மாத கர்ப்பமானார் பின்னர் பின்னர் வீட்டில் விஷயம் தெரிந்து விட வீட்டில் உள்ளவர்கள் தமிழ்ச்செல்வன் வீட்டிற்குச் சென்று மாப்பிள்ளை கேட்கின்றனர்.
அப்போது தமிழ்ச்செல்வன் குடும்பத்தினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்ய முடியாது என தெரிவித்து விட்டனர். வேறு வழியின்றி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகினார் கலைச்செல்வி. இந்த நிலையில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மகேஸ்வரியும், உதவி ஆய்வாளர் எழிலரசியும் இந்த விவகாரம் குறித்து தமிழ்ச்செல்வனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து நேரில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதலில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாத தமிழ்ச்செல்வன் பின்னர் கலைச்செல்வி காட்டிய அனைத்து ஆதாரங்களையும் பார்த்து பின்னர் நான் தான் கலைச்செல்வியின் கர்ப்பத்திற்கு காரணம் என ஒப்புக்கொண்டார். மேலும் நான் கலைச்செல்வியை திருமணம் செய்ய தயாராக உள்ளதாகவும் தங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்ததை தொடர்ந்து இரண்டு பேரும் மேஜர் என்பதால் காவல் நிலைய வளாகத்திலேயே இருந்த கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர் காவலர்கள்.
உடனடியாக மாப்பிள்ளைக்கு புது வேட்டி சட்டை, பெண்ணுக்கு கூரை புடவை மாலை மற்றும் தாலி உள்ளிட்டவை காவலர்களால் வாங்கி வரப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலிலேயே உடனடியாக திருமணம் நடத்தப்பட்டது. இந்த திருமணத்தை கலைச்செல்வியின் பெற்றோர் மற்றும் காவலர்கள் மட்டுமே இருந்த நிலையில் அவர்கள் தாலி கட்டும்போது கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டு அவர்கள் மீது அட்சதையும் போட்டனர்.
மேலும் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து பெண்ணும் , மாப்பிள்ளையும் சகிதம் சங்கீதமாக கலைச்செல்வி வீட்டிற்கு புறப்பட்டார். காதலித்து ஏமாற்றிய வரை போராடி கைப்பிடித்த கலைச்செல்வியின் செயல் காவலர்களால் பாராட்டப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu