வடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநாடு
வடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு தொடங்கியது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 23-வது மாநாடு வடலூர் நகரில் துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடின் துவக்க நிகழ்ச்சியாக வடலூர் பேருந்து நிலையம் அருகே மக்கள் ஒற்றுமை ஜோதி பயணம் மற்றும் கொடி பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி சிறப்புரையாற்றி மக்கள் ஒற்றுமை ஜோதியினை எடுத்துக்கொடுக்க மாவட்ட குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து கொடி பயணம், ஜோதி பயணம் அணிவகுப்புடன் வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள மங்கையர்க்கரசி மண்டபத்தை அடைந்தது. ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மக்கள் ஒற்றுமை ஜோதியினை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி .ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். கொடியினை மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பெற்றுக் கொண்டார். மாநாட்டு கொடியினை மூத்த தோழர் வி.முத்துவேல் ஏற்றிவைத்தார். மாநாட்டின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபிக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு முன்மொழிந்தார். மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவர் ஏ.நமச்சிவாயம் வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் அரசியல் ஸ்தாபன அறிக்கைகளையும் மாநில குழு உறுப்பினர் மூசா நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார்கள்.
மாநாட்டு அரங்கில் இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல என்கின்ற புத்தகத்தை மாநில குழு உறுப்பினர் மூசா வெளியிட மாணவர் சங்கத்தின் சௌமியா பெற்றுக்கொண்டார்.
தத்துவம் என்றால் என்ன என்ற புத்தகத்தினை செயற்குழு உறுப்பினர் எம்.மருதவாணன் வெளியிட வாலிபர் சங்கத்தில் செந்தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார். பொது மாநாட்டில் கடலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தீர்மானத்தை மாநில குழு உறுப்பினர் ஜி.மாதவன் முன்மொழிந்து பேசினார்.
மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுக் கண்காட்சியை மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் திறந்துவைத்தார். மாநாட்டில் மாவட்டம் முழுவதும் இருந்துத்து 350க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu