கடலூர்: அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக பொது மக்கள் புகார்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் எளிதில் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்றிட சுகாதார நிலையம் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன,
கடலூர் மாவட்டத்தில் மட்டும் 67 மருத்துவர்கள், 67 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்டனர். செவிலியர்கள் இன்னும் அம்மா மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப் படவில்லை, செவிலியர்களுக்கான இடம் காலியாக உள்ளதால் துணை சுகாதார நிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் , செவிலியர்களின் வேலைகளை கூடுதலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் அனைத்து மினி கிளினிக்குகளும் திறக்கப்பட்டு தற்பொழுது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது , இதில் குறிஞ்சிப்பாடி மற்றும் நடுவீரப்பட்டு வட்டார மருத்துவ எல்லைக்குட்பட்ட மினி கிளினிக்குகள் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளது , வடலூர் வட்டார மருத்துவ எல்லைக்குட்பட்ட கண்ணாடி, கல்குணம், பூவாணிக் குப்பம், இந்திரா நகர், சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள மினி கிளினிக்குகள் திடீரென மூடப்பட்டுள்ளது .யஅப்பகுதி மக்கள் மூடப்பட்ட மினி கிளினிக்குகள் பற்றி அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது கொரோனா தடுப்பூசி செலுத்தி வரும் காரணத்தினால் மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்,
மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மூடப்பட்ட மினி கிளினிக்குகளை உடனே திறக்க உத்தரவிடுமாறு அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu