தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய குறிஞ்சிப்பாடி காவல்துறை

தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய குறிஞ்சிப்பாடி காவல்துறை
X

தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய குறிஞ்சிப்பாடி காவல்துறை

நாடு முழுவதும் கொரோனா தோற்று இரண்டாவது அலையாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய தூய்மைப் பணியாளர் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய சுகாதார பணியாளர்களுக்கு காவல் துறை சார்பாக உதவுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியிருந்தார்,

அதன்படி, நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் கெங்காதரன், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் செல்வம், உதவி காவல் ஆய்வாளர் அழகிரி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் கனகராஜ், கொளஞ்சி உள்ளிட்டோர் தலைமையில் ஊராட்சி மற்றும் பேரூராட்சியில் முன்கள பணியாளர்களாக பணிபுரியக்கூடிய 160 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.

Tags

Next Story
ai and business intelligence