மழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம்

மழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம்
X

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே நெல் மூட்டைகளை வாங்க காலதாமதபடுத்தியதாலும் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த கொளக்குடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பல நாட்களாக அதிகாரிகளால் எடுக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவினர் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் பணம் கேட்டு விவசாயிகளிடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையினால் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் இதற்கு முன்பு நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்டு மீண்டு எடுத்து வந்த நெல் மணிகளையும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிமுக,திமுக கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் மெத்தன போக்காலும் தற்போது பெய்த மழையினால் நெல் பயிர்கள் அனைத்தும் மழையில் நனைந்து பாழாகிப் போனது என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நேரடியாக ஆய்வு செய்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகளை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story