உலக புகைப்பட தினம்: புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா

உலக புகைப்பட தினம்: புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா
X

உலக புகைப்பட தினத்தை முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடிய  காட்டுமன்னார்கோயில் புகைப்பட கலைஞர்கள்

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் புகைப்பட கலைஞர்கள் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடினர்.

உலக புகைப்பட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் உலக புகைப்பட கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு இன்று காட்டுமன்னார்கோயில் புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அரசு உதவி பெறும் கலைமகள் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது.

மேலும் சர்வாஜன் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மதிய உணவு மற்றும் பிரட், மருந்துகள், சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலாளர் பாஷா, இளங்கோவன், பாரதி, பிரபு, ராஜன், கிருஷ்ணமூர்த்தி, வெற்றி, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!